This is the Tamil cooking recipe of Madurai Special broth. This is very healthy for all aged
கருவேப்பிலை குழம்பு
தேவையான பொருட்கள்
- கருவேப்பிலை – கால் படி
- மிளகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 200 கிராம்
- புளி – எலுமிச்சை அளவு
- எண்ணெய் – 100 மி.லி
- மா.பருப்பு – 1
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் போடி – அரைசிட்டிகை
- கடுகு – சிறிதளவு
- பெருங்காயம் – அரை சிட்டிகை
செய்முறை
கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து இலைகளை உளற விடவும். பின்னர் அதனுடன் மிளகு, சீரகம் , மா.பருப்பு ( மாங்கோட்டையின் உள்ளிருக்கும் பருப்பு ) அனைத்தையும் சேர்த்து நைசாக அரைக்கவும்
சின்ன வெங்காயத்தை பொடியாக அறிந்து கொள்ளவும் . புளியை கரைத்து கொள்ளவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும் . கடுகு , பெருங்காயம் தலித்து அதனுடன் அறிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும் .
வெங்காயம் வதங்கி வரும் நேரத்தில் கரைத்த புலியை சேர்க்கவும். உப்பு , மஞ்சள் போடி சேர்த்து கடைசியாக கருவேப்பிலை விழுதை சேர்த்து எண்ணெய் சுண்டி சுருள வரும்வரை வதக்கவும்.
சுமார் ௩ நாட்களுக்கு கேட்டு போகாமல் இருக்கும். இந்த குழம்பை மோர் சாதம் மட்டுமல்லாமல் இட்லி தோசைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்
மிகவும் சுவையாக இருக்கும் , வயிற்று கடுப்பை போக்கும் , அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலை முடி கருமை நிறமாக மாறும்.
Tags : Tamil Samayal kurippu , Karuveppilai Kulampu , Tamil Nadu Samayal , Madurai Samayal