Search This Blog

Showing posts with label Tamil Pickle's. Show all posts
Showing posts with label Tamil Pickle's. Show all posts

Tuesday, November 18, 2014

How to prepare Ginger Pickle இஞ்சி ஊறுகாய் Tamil samayal

Ginger Pickle
Ingredients :

Ginger - 1/4  kg
Sesame oil - 50 ml
Yellow Prodi - a pinch
Mustard - 50 g 
Salt - as required
Uluntam nuts - as required
Tamarind - 15 gms
Chili powder  - 3 tsp 

இஞ்சி ஊறுகாய் 

தேவையான பொருட்கள் :

இஞ்சி   - கால் கிலோ
நல்லெண்ணெய்   - 50 மி.லி
மஞ்சள் போடி  - ஒரு சிட்டிகை
கடுகு   - தேவையான அளவு
உப்பு  - 50 கிராம்
உளுந்தம் பருப்பு  - தேவையான அளவு
புளி   - 15 கிராம்
மிளகாய் பொடி  3 ஸ்பூன்

செய்முறை :
இளம் இஞ்சியாக வாங்கி தண்ணீரில் நன்கு சுத்தமாக கழுவி கொள்ளவும் . மேல் தொலை அப்புறப்படுத்திவிட்டு   சிறிய துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் புளியைக் கரைக்கவும் . அதனுடன் மஞ்சள் போடி மற்றும் உப்பை கரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு  கடுகு , உளுந்தம் பருப்பு தாளிக்கவும் . அதில் இஞ்சி துண்டுகளை    போட்டு நன்கு கிளறவும்.

கடைசியாக புளிக்கரைசலை அதில் ஊற்றவும் . மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும். மிளகாய் போடி சேர்க்கவும்.
கடைசியாக மீதமிருக்கும் எண்ணெய் அதில் ஊற்றி கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.
சூடு ஆறியவுடன் பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.
இஞ்சி ஊறுகாய் செரிமானத்திற்கு மிகவும் நல்லது .
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சோற்றுடன் சேர்த்து இஞ்சி ஊறுகாயும் கொடுத்து வந்தால் அவர்கள் பசியெடுத்து சாப்பாடு கேட்பார்கள்

Tags :  Ginger Pickle, Tamil Samayal, Tamil Samayal Kurippu, Pickle's, Tamil Pickle's, Recipe in Tamil

Categories

Popular Posts